தொடர் தலைவலி மற்றும் வலிப்பு நோயால் அவதி: மருத்துவரை நாடியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் தொடர் தலைவலி மற்றும் வலிப்பு நோயால் கடுமையாக அவதிப்பட்டுவந்த நபர் ஒருவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கிழக்கு சீனாவின் ஹாங்க்சோ பகுதியை சேர்ந்தவர் 43 வயதான ஸூ ஸோங் ஃபா. இவரது உடம்பில் இருந்தே சுமார் 700 நாடாப்புழுக்களை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

ஸூ ஸோங் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவர்களை நாட முடிவு செய்துள்ளார். தொடர்ந்து பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்ற அவர் தமது நிலை குறித்து மருத்துவர்களிடம் விவரித்துள்ளார்.

ஆரம்பகட்ட பரிசோதனைகள் முடிந்த பின்னர், ஜியாங் ரோங் என்ற தொற்றுநோய் மருத்துவரிடம் ஸோங் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவரே இவரது உடலில் நாடாப்புழுக்களை கண்டறிந்துள்ளார். உரிய முறையில் சமைக்கப்படாத அல்லது நோய்தொற்று பாதித்த பன்றி உணவை உட்கொண்டதாலையே ஸூ சோங் பதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாடாப்புழுக்கள் அவரது உள் உறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருவதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாப்புழுக்களின் முட்டைகள் நரம்பு மண்டலத்தில் புகுந்து வலிப்பு நோயை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்