தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி நிலத்தில் பாய்ந்த விமானம்: உயிர் பயத்தில் நடுங்கிய பயணிகள்!

Report Print Basu in ஏனைய நாடுகள்

உக்ரைனில் தரையிங்கும் போது துருக்கி விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி அருகிலிருந்த நிலத்தில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான TK467 பயணிகள் விமானம் இஸ்தான்புல்லிருந்து உக்ரைனின் ஒடெசாவுக்கு பயணித்துள்ளது.

ஒடெசாவில் பலத்த காற்று வீசிய நிலையில் விமானத்தை தரையிறக்கும் முதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில், விமானி இரண்டாவது முறை தரையிறக்க முயன்ற போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி அருகிலிருந்து நிலத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், விமானத்தின் முன் பகுதியும், முன் சக்கரமும் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் அவசரகால வழியில் வெளியேறியுள்ளனர். விமானத்தில் இருந்ந 136 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் பத்திரமாக மீட்கப்பட்டதாக ஒடெசா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மதிப்பிடுவதற்காக பொறியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து விமானநிலைய ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விபத்தை தொடர்ந்து ஒடெசா விமான நிலைய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்