ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள்: இஸ்ரேல் பிரதமர் பகிரங்க குற்றச்சாட்டு

Report Print Abisha in ஏனைய நாடுகள்

என்னுடைய ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

பெஞ்சமி நேதன்யாகு தன் நண்பர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பர பொருட்களை பரிசாக பெற்றதாகவும், நாளிதழ்களில் தனக்கு சாதகமான செய்திகள் வெளியிட வர்த்தக உதவி செய்ததாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

பின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பெஞ்சமின் நேதன்யாகு மீது, மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை நேதன்யாகு மறுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ‘என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அரசியல் நோக்கம் கொண்டவை. எனது ஆட்சியை கவிழ்ப்பதுதான் இந்த விசாரணையின் நோக்கம். சட்டத்தின்படி நான் நாட்டை தொடர்ந்து வழிநடத்துவேன். பொய்கள் வெற்றி பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்