பிள்ளை மீது அதிகமாக பாசம் காட்டுகிறாள்: கணவரால் இளம் தாயாருக்கு ஏற்பட்ட துயரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் சொந்த பிள்ளை மீது அதிகம் பாசம் காட்டுவதாக கூறி பொறாமையால் இளம் தாயாரை கணவரே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

17 வயதேயான மரியா எட்வர்டா லிமா சம்பவத்தின்போது தமது ஒரு வயது பிள்ளையை மடியில் வைத்து கொஞ்சிக்கொண்டு இருந்துள்ளார்.

கணவரான தம்மை கண்டுகொள்ளாமல் பிள்ளையை மட்டுமே கவனிப்பதாக கூறி ஆத்திரம் கொண்ட கணவர் பேட்ரிக் அசெவெடோ சில்வா(22) துப்பாக்கியை எடுத்து மனைவியின் கையிலும் பின்னர் தலையிலும் சுட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்து மாயமாகியுள்ளார். திங்களன்று இரவு மரியா தமது தாயாருக்கு அனுப்பிய குறுந்தகவலில், பேட்ரிக்கிடம் துப்பாக்கி இருப்பதாகவும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

(Image: FocusOn News)

ஆனால் செவ்வாய்க்கிழமை காலையில், மரியா கொல்லப்பட்ட தகவல் தெரியவந்ததும், அதிர்ச்சியடைந்த அந்த பெற்றோர் மரியாவின் குடியிருப்புக்கு விரைந்துள்ளனர்.

அங்கே படுகாயத்துடன் உயிருக்கு போராடும் மரியாவையும், அவருக்கு பக்கத்தில் அழுதபடி இருக்கும் ஒரு வயது குழந்தையையும் கண்டுள்ளனர்.

உடனடியாக மரியாவை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் துப்பாக்கி குண்டு தலையில் சிக்கலான பகுதியில் சிக்கியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

(Image: FocusOn News)

மட்டுமின்றி மரியாவின் நிலை கொஞ்சம் தேறினால் அறுவை சிகிச்சைக்கு முயற்சி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நாளில் மரியா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குடும்பத்தாரின் ஒப்புதலுடன் மரியாவின் உறுப்புகளை தானம் செய்யப்பட்டது. இந்த நிலையில், உள்ளூர் பேருந்து ஒன்றில் பயணம் செய்த பேட்ரிக்கை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்