அந்த குழந்தைக்கு நான் தந்தையில்லை! சவால் விட்ட வழக்கறிஞர்.. DNA பரிசோதனையில் தெரிந்த உண்மை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கென்யாவில் நான்கு வயது குழந்தைக்கு நான் தந்தையில்லை எனவும், வேண்டுமென்றால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனவும் வழக்கறிஞர் தைரியமாக கூறிய நிலையில் டிஎன்ஏ பரிசோதனையில் அவர் தான் உண்மையான தந்தை என தெரியவந்ததுள்ளது.

ரிச்சர் கிப்சங்க் என்ற வழக்கறிஞரிடம் ஒரு வழக்கு தொடர்பாக நபர் ஒருவர் வந்தார். அந்த நபரின் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு ரிச்சர் தான் தந்தை என குழந்தையின் தாய் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.

ஆனால் இதனை மறுத்த ரிச்சர், என் கட்சிக்காரரின் மனைவி என்னை மயக்க நினைத்தாள், ஆனால் நான் அவரிடம் மயங்கவில்லை.

அவருக்கு பிறந்த குழந்தைக்கு நான் தந்தையில்லை என்பதை ஆணித்தரமாக கூறி கொள்கிறேன். வேண்டுமென்றால் மருத்துவ பரிசோதனைக்கும் தயார் என சவால் விட்டார்.

ரிச்சர் தைரியமாக இப்படி கூறுவதால் குழந்தைக்கு அவர் தந்தையாக இருக்க மாட்டார் என பலரும் நினைத்தனர்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி சமீபத்தில் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதுல் ரிச்சர் நினைத்ததற்கு மாறாக அவர் தான் அந்த குழந்தைக்கு தந்தை என சந்தேகமில்லாமல் உறுதியாகியுள்ளது.

தன்னிடம் பணம் பறிக்க குழந்தையின் தாய் இப்படி கூறுவதாக தெரிவித்த ரிச்சருக்கு டிஎன்ஏ முடிவுகள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து குழந்தைக்கான வாழ்வாதார செலவை அவர் ஏற்று கொள்ள வேண்டும் என நீதிமன்றம் விரைவில் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்