சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்... பள்ளத்திற்குள் பாய்ந்த கார்: ஒரு அதிர்ச்சி வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரேசிலில் சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட, வேகமாக வந்த கார் ஒன்று அந்த பள்ளத்திற்குள் முற்றிலுமாக சென்று மறையும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள வீடியோவில், சாலையில் ட்ரக் ஒன்று வேகமாக செல்ல, அது சென்றதும் சாலையில் ஒரு பெரிய பள்ளம் உருவாவதைக் காணமுடிகிறது. பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு காரின் சாரதி அதைக் கவனித்து விலகிச் செல்கிறார்.

ஆனால், அவரைத் தொடர்ந்து வந்த மற்றொரு கார், அப்படியே பள்ளத்துக்குள் முழுமையாக சென்று மறைகிறது.

பக்கத்தில் காரை நிறுத்திய சாரதி ஓடி வந்து பள்ளத்துக்குள் சென்ற காரின் சாரதிக்கு என்ன ஆனது என்று பார்க்கிறார்.

அதிசயிக்கத்தக்க விதமாக, பள்ளத்துக்குள்ளிருந்து ஒரு பெண் எழுந்து வருகிறார். anessa Cavagnolli (34) என்ற அந்த பெண்ணுக்கு மூக்கில் அடிபட்டிருக்கிறது.

காருக்குள்ளிருந்த அவரது மகள் Andressa Carnesela (12)க்கும் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் அவர்கள்.

அந்த சாலை அமைத்து 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதோடு, அந்த சாலையின் கீழ் தண்ணீர் மற்றும் கழிவு நீர் குழாய்களும் செல்ல, அதன் மீது ட்ரக் ஒன்று செல்லவே, ட்ரக்கின் கனம் தாங்காமல் அந்த சாலை இடிந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்