உயிரிழந்தவரின் சடலத்தை தரதரவென இழுத்து சென்ற குடும்பத்தார்! அதிர்வலையை ஏற்படுத்திய வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் உயிரிழந்தவரின் சடலத்தை தரதரவென இழுத்து கொண்டு இன்சுரன்ஸ் நிறுவனத்துக்கு வந்த உறவினர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KwaZulu-Natal மாகாணத்தில் Old Mutual இன்சுரன்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.

இங்கு சில தினங்களுக்கு முன்னர் நபர் ஒருவரின் சடலத்தை அவர் குடும்பத்தார் எடுத்து வந்தனர். மேலும் சடலத்தை தரதரவென அவர்கள் இழுத்து வந்தனர்.

ஏன் இவ்வாறு செய்தார்கள் என விசாரணை நடந்த நிலையில் அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது.

அதாவது, உயிரிழந்த நபரின் இன்சுரன்ஸ் பாலிசி தொகையை நிறுவனம் கொடுக்க மறுத்ததாகவும், குறித்த நபர் உயிரிழந்துவிட்டார் என்பதை நிரூபிக்க அவர் சடலத்தை உறவினர்கள் கொண்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இன்சுரன்ஸ் நிறுவனத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு அவமானமான விடயம், இறந்தவரின் சடலத்தை வைத்து இப்படியா செய்வது? கருப்பர்களின் பணத்தை இந்த நிறுவனம் எப்போது திரும்பி கொடுக்காது, இறந்தவர்கள் விடயத்திலும் இனவெறி தாக்குதல் நடத்துவது சரியா என பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இன்சுரன்ஸ் நிறுவனம் உயிரிழந்த நபரின் நிலுவை தொகையை கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்