பறக்கும் விமானத்தில்... நடுவானில் பயணிகளை திகைப்பில் ஆழ்த்திய புதுமண தம்பதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து நாட்டு காதலர்கள் இருவர் 34,000 அடி உயரே பறக்கும் விமானத்தில் திருமணம் செய்து கொண்டு பயணிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

விமானங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட நியூசிலாந்து நாட்டவர்களான டேவிட் வாலியண்ட் மற்றும் கேத்தி ரோல்ஃப் ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த பின்னர், அவர்களுக்கு திருமணத்திற்கான இடம் அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களின் விருப்பமான விமானத்திலேயே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவுக்கு வந்துள்ளனர்.

தொடர்ந்து சிட்னியில் இருந்து ஆக்லாந்துக்கு சென்ற விமானத்தில் அக்டோபர் 9 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

(Image: Jetstar/Youtube)

ஏற்கெனவே திட்டமிட்டபடி கேத்தி வெள்ளை உடையில் மணப்பெண் கோலத்தில் நடந்துவர, அவருக்கு பின்னால் விமான ஊழியர்கள் நடந்துவர, மணமகன் டேவிட் விமானத்தின் முன்புறத்தில் காத்திருந்தார்.

முந்தைய நாள் கேத்தி தங்களது திருமணம் தொடர்பில் விமான நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற்றிருந்தார்.

திருமணத்தை தொடர்ந்து பறக்கும் விமானத்திலேயே சின்னதாக விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர் அந்த விமான ஊழியரகள்.

34,000 அடி உயரே பறக்கும் விமானத்தில் திடீரென்று திருமணம் நடைபெற்றது, விமான பயணிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

(Image: Jetstar/Youtube)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்