விசித்திர அலங்காரத்தால் இணையத்தில் வைரலான மணப்பெண்: வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தக்காளி விலைமதிப்பற்ற பொருளாக மாறியுள்ள நிலையில், ஒரு பாகிஸ்தான் மணமகள் தனது திருமணத்தில் தக்காளி நகைகளை அணிந்து பொருளாதாரத்தை கிண்டலடித்துள்ளார்.

பொருளாதார மந்தநிலையின் காரணமாக பாகிஸ்தானில் தக்காளியின் விலை 320 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசின் மெத்தனத்தினாலே இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக மக்கள் அரசின் மீது கடும் கோபத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாக்கிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் நைலா இனாயத் ஊடகத்தின் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், மணமகள் பாரம்பரிய தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளி நகைகளைத் தேர்வு செய்துள்ளதை பற்றி பேசியுள்ளார்.

நகைச்சுவை உணர்வோடு அமர்ந்திருக்கும் மணமகள், , நெக்லஸ், வளையல்கள், காதணிகள் மற்றும் நெத்திசூடி ஆகியவற்றிற்கு பதிலாக தக்காளி அணிந்துள்ளார்.

முதலில் மணமகளை வாழ்த்தும் அந்த செய்தி தொகுப்பாளர் அவர் ஏன் தக்காளி அணிந்திருக்கிறார் என்று கேட்கிறாள்.

அதற்கு அந்த மணமகள் தங்கத்தின் விலையை போல தக்காளியின் விலையும் கூரையை பிய்த்துக்கொண்டு செல்வதால், நான் தங்கத்திற்கு பதிலாக தக்காளி மற்றும் பைன் கொட்டைகளை அணிந்தேன் என்று பதில் கூறினார்.

தக்காளிகளுக்கு கீழ் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாததால் பைன் கொட்டைகள் எங்கே என்று செய்தி தொகுப்பாளர் விசாரிக்கும் போது, ​​அவள் ஒரு உறை ஒன்றைத் திறந்து பைன் கொட்டைகளை தனது மூத்த சகோதரரால் 'சலாமி' (திருமண பரிசு) என்று அனுப்பியதைக் காட்டுகிறாள்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...