உறவினரின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர்களுக்கு குளவிகளால் நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீனாவில் உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்குக்கு சென்றவர்கள் மீது குளவிகள் படையெடுக்க, மூன்று பேர் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது.

Tangdu என்ற கிராமத்தில் இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.

இறுதிச்சடங்குக்கு சென்றவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, திடீரென குளவிகள் கூட்டமாக அவர்களை தாக்கத் தொடங்கியுள்ளன.

45 வயதுக்கும் 87 வயதுக்கும் இடைப்பட்ட எட்டு பேர் வசமாக சிக்கிக்கொள்ள, குளவிகள் அவர்களை பந்தாடிவிட்டன.

70 வயதுடைய ஒருவர், கொட்டு பட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, 60 மற்றும் 87 வயதுடைய மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் உயிரிழந்தார்கள்.

மேலும் ஐவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், ஒருவரது நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...