நடுரோட்டில் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறிய பெட்ரோல் டேங்கர்..! வாகனங்களை விட்டு ஓடிய மக்கள்: திகில் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறி சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Caraguatatuba பகுதியில் உள்ள SP-99 சாலையிலே இக்கோர விபத்து நடந்துள்ளது. சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி காட்சியில், வேகமாக வந்த டேங்கர் லொறி, சாலையின் வளைவில் திரும்பும் போது சரிந்து சாலையின் ஓரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

முன்னால் சென்ற கார் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. டேங்கரில் இருந்த எரிபொருள் சாலை முழுவதும் கசிந்தது, உடனே சாலையின் இருபுறமும் சென்ற அனைத்து வாகனங்களும் அங்காங்கே நிறுத்தப்பட்டது.

அப்போது, திடீரென எரிபொருள் தீப்பிடிக்க லொறி வெடித்துச் சிதறி சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

அங்கிருந்து மக்கள் அனைவரும் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து தீயணைப்பு வாகனத்துடன் வீரர்கள் சம்பவியடத்திற்கு விரைந்து தீயை அணைத்துள்ளனர்.

பின்னர், லொறிக்குள் சிக்கி இறந்த ஓட்டுநரின் உடலை கண்டெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் சிக்கிய காரில் பயணித்த இருவரும் லேசான காயங்களுடன் தப்பியதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...