உலகநாடுகளை ஸ்தம்பிக்க வைத்த வடகொரியா... 2017-ஆம் ஆண்டு நடத்திய சோதனை பற்றி வெளியான பகீர் தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலகநாடுகளை தன்னுடைய அணு சக்தி சோதனை மூலம் வடகொரியா மிரட்டி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை கிம் மிரட்டி வந்தார்.

இதனால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இந்த பொருளாதார தடை காரணமாக வடகொரியா பெரிய அளவில் பாதிப்பை சந்தித்ததால், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை தயாரிப்பதை நாங்கள் விட்டுவிடுவதாக, அதற்கு தங்கள் நாட்டின் மீது இருக்கும் பொருளாதார தடையை நீக்கும் படி வடகொரியா, அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டது.

IMAGES/GETTY IMAGES

இருப்பினும் வடகொரியா நடத்தி வந்த அணு ஆயுத சோதனைகள் குறித்து, உலகின் பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டு வடகொரியாவில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனை குறித்து 3 பேர் கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது.

இந்த 3 பேர் கொண்ட குழுவில் ஸ்ரீஜித், ரித்தேஷ் அகர்வால் மற்றும் ஏ.எஸ்.ராஜாவாட் ஆகியோர் ஆய்வு செய்து அது குறித்த ஆய்வறிக்கையையும் தற்பொழுது தாக்கல் செய்துள்ளனர்.

அதில், வடகொரியா நடத்திய அணுசக்தி சோதனை மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த சோதனையில் 245 முதல் 271 கிலோ டன் எடை கொண்டது வெடிகுண்டுகள் சோதனை செய்யப்பட்டது.

Reuters

இந்த அணுசக்தி குண்டுகள் ஹிரோஷிமாவில் 1945-ஆம் ஆண்டு வீசப்பட்ட குண்டுகளை விட ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட அணுக்குண்டை விட தற்பொழுது சோதனை செய்யப்பட்ட அணுகுண்டுகள் 17 மடங்கு ஆற்றல் அதிகமானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டில் 15 கிலோ டன் வெடிப்பொருள் மட்டுமே இருந்தது.

வடகொரியா நடத்திய சோதனை மவுண்ட் மண்டபத்திற்கு கீழ் 542 மீற்றர் ஆழத்தில் நடத்தப்பட்டிருக்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே இந்த சோதனை நடத்தப்பட்ட இடத்தில் உள்ள மலை சற்று நகர்ந்துள்ளது என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக நிலநடுக்கம் ஏதும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ வெளியிட்டுள்ள இந்த அறிக்கையால் உலக நாடுகள் பீதியில் உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...