நடுக்கடலில் திடீரென எரிந்து சாம்பலான படகு.. 12 பேர் மாயம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

தென் கொரியாவின் தெற்கு கடலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்து சம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெஜூ தீவிக்கு அருகே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தன்று காலை 7 மணியளவில் கடலோர காவல்படைக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது..

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் படகு கண்டுபிடித்ததாகவும், படகின் மேற்புறம் முழுமையாக எரிந்துவிட்டதாகவும் கடலோர காவல்படை அதிகாரி லீ கியுன்-ஹான் கூறினார். கடலோர காவல்படை வெளியிட்ட புகைப்படத்தில் 29 டன் படகு கருப்பு புகையில் மூழ்கியிருப்பதைக் காட்டியது.

இவ்விபத்தை அடுத்து படகில் பயணித்த 12 பேரை தேடும் பணி தீவிரப்படத்தப்பட்டது. தப்பிப்பிழைத்தவர்களை தேடுவதற்காக கடலோர காவல்படையினரும் கடற்படையினரும் படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்து விமானங்களை அனுப்பி வைத்தனர் என்று லீ கியுன்-ஹான் தெரிவித்தார்.

படகில் இருந்து 7.4 கி.மீ தெற்கே ஒரு மீனவர் மயக்கமடைந்து மூச்சு விடாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, மீட்புப் பணியாளர்கள் அவரை அருகிலுள்ள ஜெஜூ தீவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு சென்றுள்ளனர்.

மேலும், காணாமல் போன 11 பேரை கண்டுபிடிக்க தேடுதல் நடைபெற்று வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மீன்பிடிக் கப்பல்களையும் உள்ளடக்கிய மீட்பு முயற்சிகள், பலத்த காற்று மற்றும் அப்பகுதியில் பெரிய அலைகளால் மந்தமாகியுள்ளன.

mirror

விபத்துக்குள்ளான படகில் 6 பேர் தென் கொரியர்கள், மற்ற ஆறு பேர் வியட்நாமியர்கள் பயணித்ததாக லீ கூறினார். மேலும் மீன் பிடிக்க நவம்பர் 8ம் திகதி டோங்கியோங் பிரதான துறைமுகத்திலிருந்து புறப்பட்ட அவர்கள் திங்களன்று துறைமுகத்திற்குத் திரும்ப திட்டமிட்டிருந்தனர் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...