விமானத்தின் இருக்கையில் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்! தப்பி ஓடிய பயணி: என்ன இருந்தது தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்த விமானத்தின் இருக்கையில் சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை மறைத்து வைத்து தப்பி ஓடிய கடத்தல் கும்பல் குறித்து அதிகாரிகள் தீவிரவமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்த பயணிகள் விமானம் ஒன்று நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

அதன் பின் இந்த விமானம் மீண்டும் மாலை 5.45 மணிக்கு மஸ்கட்டுக்கு புறப்பட்டு செல்ல தயாராக இருந்ததால், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது விமானத்தின் ஒரு இருக்கை மட்டும் வழக்கத்திற்கு மாறாக உயரமாக இருந்துள்ளது. இதனால் ஊழியர்கள் அது என்ன? என்று சந்தேகப்பட்டு தூக்கி பார்த்த போது அடியில் கருப்பு நிறத்தில் இருக்கும் காகிதம் ஒன்றில் 3 பார்சல்கள் இருப்பதை கண்டுள்ளனர்.

அதன் பின் உடனடியாக இது குறித்து விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுக்க, அதன் பின் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம், அந்த பார்சலை சோதனை செய்தனர். அதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் அந்த பார்சல்களை ஊழியர்கள் பிரித்து பார்த்தபோது, ஒவ்வொன்றிலும் ஒரு தங்கக்கட்டி வீதம் 3 தங்கக்கட்டிகள் இருந்ததால், உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.

அதிகாரிகள் அந்த தங்கக்கட்டிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் மொத்த எடை 3 கிலோ 365 கிராம் எனவும் இதன் சர்வதேச மதிப்பு 1.33 கோடி ரூபாய் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து, தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது யார்?, என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கடத்தல் கும்பலை சேர்ந்த நபர், பயணியாக ஓமன் வழியாக சென்னைக்கு தங்கத்தை கடத்தி வந்திருக்கலாம். விமான நிலையத்தில் சோதனை கெடுபிடி அதிகமாக இருந்தது குறித்து, விமானநிலையத்தில் இருந்தபடியே யாரோ தகவல் கொடுத்ததால், தங்கத்தை இருக்கை அடியில் வைத்துவிட்டு சென்றிருக்கலாம் எனவும், மூன்று பார்சல் இருப்பதால் ஒரு நபரா இல்லை மூன்று பேர் கொண்ட கும்பலா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...