பெட்ரோல் விலை 3 மடங்காக உயர்த்திய ஈரான்: மக்களிடயே பெரும் அதிர்ச்சி

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்த்தியதால் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி ஈரான் அரசு மானியம் முறைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஒரு காருக்கு மாதம் 60 லிட்டர் மட்டுமே வழங்கப்படும் எனவும் அந்த அளவுக்கு மேல் வாங்கவேண்டுமானால் அதற்கு இருமடங்கு விலை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இணையதள சேவைகளிலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதன் காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

அதுமட்டுமின்றி தலைநகர் தெஹ்ரான் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இத்தகவலை அறிந்து அங்கு வந்த பொலிசார் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டும் பொதுமக்கள் கலைந்து செல்லாததால் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலையச் செய்துள்ளனர்.

மேலும் பொருளாதார ரீதியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டாலும், ஈரானிய அரசாங்கத்திற்கும், அதன் பிராந்தியக் கொள்கைகளுக்கும் எதிராக சில கோஷங்கள் எழுப்பப்பட்டன மற்றும் தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்