நீரில் மிதக்கும் அழகிய வெனிஸ்!

Report Print Abisha in ஏனைய நாடுகள்

இத்தாலியின் வெனிஸ் நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கிய அழகிய வெனிஸ் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த சில நாட்களில் பெய்த கனமழை மற்றும் கடல் சீற்றத்தால் 50ஆண்டுகளாக கண்டிராத அளவில் அந்நகரம் சேதம் அடைந்துள்ளது.

அங்குள்ள தேவாலையங்கள், வணிகவளாகங்கள் அனைத்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தை தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிவாரணப்பணிக்காக முதற்கட்டமாக 100கோடி ரூபாய் வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே அறிவித்துள்ளார்.

வெள்ளம் பாதிப்பில் சிக்கிய சுற்றுலா பயணிகள் புனித மார்க்ஸ் சதுக்கத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்