கிரீன்லாந்தின் பிரதான விமான நிலையம் மூடல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கிரீன்லாந்தின் பிரதான விமான நிலையம் காலநிலை மாற்றம் காரணமாக ஐந்து ஆண்டுகளுக்குள் பொதுமக்கள் விமானங்களை முடிவுக்கு கொண்டுவர உள்ளது.

ஏனெனில், உறைபனி உருகுவது ஓடுபாதையை சேதப்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய மையமான Kangerlussuaq விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 11,000 விமானங்கள் தரையிறங்கியும் புறப்பட்டும் உள்ளன.

வெப்பநிலை அதிகரிக்கும் போது நிலத்தில் உள்ள உறைந்த திடமான மண்ணின் அடுக்கு உருகுகிறது. விமான நிலைய ஊழியர்களைப் பொறுத்தவரை, ஓடுபாதையில் உள்ள பனி மற்றும் பனிக்கட்டிகளை அகற்றுவது ஒரு தொடர் போராட்டமாக மாறியுள்ளது.

இதன் விளைவாக, அதிகாரிகள் ஒரு புதிய வசதியை உருவாக்கத் தொடங்கியுள்ளனர். நூக் மற்றும் வடக்கில் ஒரு புதிய விமான நிலையத்தை கட்டமைத்து வருகின்றனர். மேலும் இந்த விமான நிலையத்தின் பொறுப்பை டேனிஷ் விமானப்படை பொறுப்பேற்கும் என்று விமான நிலைய மேலாளர் பீட்டர் ஹாக் கூறினார்.

கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவாகும், சுமார் 80 சதவீதம் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது.

ஆனால் புவி வெப்பமடைதலால் கிரீன்லாந்து கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது, இதனால் பனிகட்டிகள் முன்பு நினைத்ததை விட வேகமாக உருகும் என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

விமானநிலையத்தின் நிலைமை, கட்டமைக்கப்பட்ட சூழல் மட்டுமின்றி இயற்கை சூழலும் காலநிலை மாற்றத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்