அம்மா அழாதீங்க... இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 5 வயது சிறுமி! கண்கலங்க வைத்த சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரேசிலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து வயது சிறுமி ஒருவர் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அந்த சிறுமி அவர் அம்மாவை கண்டு அழாதே அம்மா என்று அவருக்கு தைரியம் கூறிய சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

பிரேசிலின் Rio de Janeiro-வில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டால், அங்கு தன் தாயுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த Ketellen Umbelino de Oliveira Gomes என்ற 5 வயது சிறுமியின் காலில் பட்டதால், இரத்தம் வழிந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த செவ்வாய் கிழமை Ketellen Umbelino de Oliveira Gomes தன்னுடைய அம்மாவுடன் Cohab-விலிருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

மிகவும் பரபரப்பாக காணப்படும் அப்பகுதியில், அவர்களை கடந்து சென்ற காரில் இருந்த நபர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதால், இதில் Ketellen Umbelino de Oliveira Gomes பாதிக்கப்பட்டார்.

அவரின் காலை துப்பாக்கி குண்டு துளைததால், இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். அப்போது உடன் இருந்த அவரின் மகள் துடிப்பதைக் கண்டு உடனடியாக அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்க, உடனே அடிபட்டு கிடந்த Ketellen Umbelino de Oliveira Gomes அம்மா நீங்க அழாதீர்கள், ஒன்றுமில்லை என்று தைரியம் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமி உடனடியாக அருகில் இருக்கும் Albert Schweitzer மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் David Gabriel Martins do Nascimento என்ற 17 வயது இளைஞனும் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் பிரேசிலில் இந்த ஆண்டு மட்டும் 12 வயதுக்கு கீழே துப்பாக்கி குண்டால் உயிரிழந்த சிறுமிகளில் Ketellen Umbelino de Oliveira Gomes ஆறாவது குழந்தை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்