பொழுதுபோக்குக்காக ஜிம்முக்கு போன ஒரு பெண் மருத்துவர்: இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பொழுதுபோக்காக ஜிம்முக்கு சென்ற ஒரு பெண் மருத்துவர், இன்று இணையத்தையே தனது ‘கட்டழகால்’ கவர்ந்துவருகிறார்.

Yuan Herong (30) சீனாவில் பாரம்பரிய மருத்துவராக பணியாற்றி வருபவர். மேலும் கொஞ்சம் வலிமையாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி நிலையம் பக்கம் போனவர், இன்று அவரது உடற்கட்டை இணையமே வியந்து ரசிக்கிறது, பின்தொடர்கிறது.

வாரத்தில் ஐந்து முறை உடற்பயிற்சி நிலையம் செல்லும் Yuan மேற்கொண்ட கடுமையான பயிற்சிகள், இன்று அவரது உடலை கட்டுடலாக மாற்றியிருக்கின்றன.

அவர் ஒன்றும் எளிதாக இப்படி ஒரு உடலைப் பெற்றுவிடவில்லை என்பதை காய்த்துப்போன அவரது கைகளைப் பார்த்தாலே நன்றாக புரியும்.

சிலர் அவர் பெண்மையுடன் இல்லை என விமர்சிக்க, மற்றவர்கள் சொல்வதைக் குறித்து எனக்கு கவலையில்லை, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அவ்வளவுதான் என்கிறார்.

வீடியோவை காண

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்