ஒரு புறாவால் நடந்த அக்கப்போர்... 20 நிமிடங்கள் தாமதமான விமானம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்ய விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த விமானத்தில் புறா ஒன்று திடீரென உள்ளே புகுந்ததால் 20 நிமிடங்கள் தாமதமாகியுள்ளது.

சனிக்கிழமையன்று ரஷ்யாவின் ஷெரெமெட்டீவோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து, ஏரோஃப்ளோட் SU1730 என்கிற விமானமானது புறப்பட தயாராக இருந்தது.

அப்போது யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் உள்ளே புகுந்திருந்த புறா ஒன்று கேபின் வழியாக அங்குமிங்கும் பறக்க ஆரம்பித்தது.

அதனை பிடித்து வெளியில் விடுவதற்காக விமான ஊழியர்கள் சிறிது நேரம் முயற்சித்து பார்த்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, விமானத்தின் கதவை பணிப்பெண் ஒருவர் திறந்துவிட்டார்.

அதன்பிறகு புறா வெளியில் பறந்து சென்றது. இந்த சம்பவத்தால் விமானம் புறப்பட 20 நிமிடங்கள் தாமதமானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்