187 செ.மீ. வெள்ளத்தில் மூழ்கிய வெனிஸ் நகரம்.. தத்தளிக்கும் மக்கள்: பேரழிவை அறிவித்தார் மேயர்

Report Print Basu in ஏனைய நாடுகள்

இத்தாலியின் பிரபல சுற்றுலா தளமான வெனிஸ் நகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நகர மேயர் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளார்.

வெனிஸ் நகரத்தில் தொடர்ந்து பொழியும் பலத்த மழையால் செவ்வாயன்று இரவு 10:50 மணியளவில் வெள்ள அளவு 187 செ.மீ. உயிர்ந்ததாக நகர அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.

இது 50 ஆண்டுகளுக்கு பிறகு நகரத்தை தாக்கிய இரண்டாவது பெரிய வெள்ளமாகும். கடந்த 1966ம் ஆண்டு 194 செ.மீ. உயரம் வரை வெள்ளம் ஏற்பட்டது நினைவுக் கூரதக்கது.

தொடர் மழையால் நகரின் வரலாற்று சிறப்புமிக்க basilica தேவாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மட்டுமின்றி பல சுற்றுலா தளங்கள், சதுரங்கள் மற்றும் தெருக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

வெனிஸ் நகரம் பேரழிவால் பாதிக்கப்பட்டதாக அந்நகரத்தின் மேயர் Luigi Brugnaro அறிவித்துள்ள நிலையில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, அரசாங்கம் உடனடி உதவியளிக்க வேண்டும். செலவு அதிகமாக இருக்கும். இது காலநிலை மாற்றத்தின் விளைவாகும். 187 செ.மீ. உயிர வெள்ளம் சரிசெய்ய முடியாத சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என Luigi Brugnaro குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்