இந்த நாட்டிற்கு செல்லாதீர்கள்... குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா

Report Print Basu in ஏனைய நாடுகள்

பொலிவியாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செவ்வாயன்று குடிமக்களை எச்சரித்துள்ளது.

பொலிவியா நாட்டில் சமீபத்தில் நடந்த சர்ச்சைக்குரிய தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அந்நாட்டில் தூதரக அதிகாரிகள் இருப்பை குறைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறுவுத்துறை அமைச்சகம் தெரவித்துள்ளது.

உள்நாட்டு அமைதியின்மை காரணமாக பொலிவியாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொலிவியாவில் உள்ள தூதரக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளதாகவும், அரசியல் உறுதியற்ற தன்மை காரணமாக அவசரகால அமெரிக்க அரசு ஊழியர்கள் வெளியேற அனுமதி வழங்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

பொலிவியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், சாலைத் தடைகள் மற்றும் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

சில ஆர்ப்பாட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு வழிவகுத்தன, உள்ளுர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தனர் என அமெரிக்கா வெளியுறவுத்துறை தெரவித்துள்ளது.

அக்டோபர் 20 அன்று பொலிவியா ஜனாதிபதித் தேர்தலில் Evo Morales வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட அமைதியின்மையில் 7 பேர் கொல்லப்பட்டதாக பொலிவியாவின் அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் Morales மோசடி செய்து வெற்றிப்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொலிவியாவில் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த நடந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் ஆதரவை இழந்து, மெக்சிகோவுக்கு நாடுகடத்தப்பட்ட பின்னர் Morales ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்