சீன ஆதரவாளரை தீ வைத்து எரித்த ஹாங்காங் போராட்டகாரர்கள்: நடுங்க வைக்கும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஹாங்காங்கில் போராட்டகாரர்களுடன் வாக்குவாதத்தல் ஈடுபட்ட சீனா ஆதரவாளர் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்கும் கைதிகளை, சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, ஐந்து மாதங்களாக அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மா ஆன் சான் என்ற பகுதியில், சீன ஆதரவாளர் ஒருவர், போராட்டம் நடத்திய இளைஞர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்கு வாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஒரு இளைஞர், சீன ஆதரவாளர் மீது, எரிபொருளை ஊற்றி தீ வைத்தார். இதையடுத்து, அவர் மீது தீப்பற்றியது. இதில், அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்..

ஹாங்காங் முழுவதும் வன்முறையும், பரபரப்பும் நிலவியதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்