நேரலையில் பெண் தொகுப்பாளினிக்கு திடீரென்று முத்தம் கொடுத்த நபர்... அவர் என்ன செய்தார் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

லெபனான் நாட்டில் போராட்டக்காரர் ஒருவர் நேரலையில் செய்தியை வழங்கிக் கொண்டிருந்த பெண் தொகுப்பாளருக்கு முத்தம் கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

லெபனான் நாட்டில் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த அக்டோபர் 17-ஆம் திகதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

லெபனானில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி பதவி விலகினார்.

இந்நிலையில் லெபனானின் பிரபல பெண் தொகுப்பாளரான Darine El Helwe இந்த போராட்டம் குறித்து நேரலையில் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று அங்கு வந்த போராட்டக்காரர் ஒருவர், கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு சென்றார்.

இதனால் முதலில் அதிர்ச்சியடைந்த அவர் அதன் பின் முகத்தில் சிரிப்பை காணபித்துவிட்டு, நேரலையில் தொடர்ந்து பேசினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

இணையவாசிகள் பலரும் இது வேடிக்கையான ஒன்று என கூற, ஒரு சிலர் இது தவறானது என்று குறிப்பிட்டு வந்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து Darine El Helwe கூறுகையில், நான் அவரைப் பார்க்காமல், முத்தத்தை உணர்ந்தபோது நேரலையில் இருந்தேன்.

எனது குரல் நடுங்கியிருந்தாலும், ஏற்றுக்கொள்ள முடியாத செயல் இருந்தபோதிலும், நான் உணர்ச்சி ரீதியாக நிலையானவனாக இருந்தேன், கமெராவுடன் தொடர்பை வைத்திருந்தேன் என்று கூறினார்.

முத்தமிட்ட நபர் இதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதால், இந்த சம்பவத்தில் தனக்கு கோபம் குறைந்திருப்பதாக அவர் கூறியதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்