வெளிநாட்டு விமானத்தில் சக பயணி செய்த மோசமான செயல்... துணிச்சலாக பெண் பயணி வெளியிட்ட புகைப்படம்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

விமானத்தில் பயணி ஒருவர் காலை தூக்கி சீட்டின் மேலே வைத்திருந்த புகைப்படத்தை சக பயணி ஒருவர் பதிவேற்றம் செய்திருப்பது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் செய்யும் சேட்டை எல்லை மீறியே சென்று கொண்டிருக்கிறது என்று கூறலாம். இது குறித்து விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமான ஊழியர்கள் எத்தனை முறை அறிவுரை கூறினாலும், ஆனால் பயணிகள் நாங்கள் செய்வது சரி என்பது போல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பெண் பயணி ஒருவர் நீண்ட தூர பயணமாக விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரின் அருகில் இருந்த சக பயணி, தன்னுடைய காலை, பெண் பயணி உட்கார்ந்திருக்கும் சீட்டின் மேல் போட்டுள்ளார்.

இதனால் அதை புகைப்படமாக எடுத்த அவர் ரெட்டிட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, இது வைரலானது. இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் இது குறித்து நீங்கள் விமான ஊழியரிடம் சொல்லியிருக்கலாம் என்றும் ஒரு சிலர் இது ஒரு மோசமான செயல் என்று கூறி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்