மொடலின் மகன் வாழ்நாளில் என்னை சந்திக்காமல் இருந்தால்... மலேசிய முன்னாள் மன்னர் நிபந்தனை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தனது முன்னாள் மனைவியும் அவருக்கு பிறந்துள்ள மகனும் வாழ்க்கையில் எப்போதுமே தன்னை சந்திக்காமல் இருக்க சம்மதித்தால் பெருந்தொகை ஒன்றை தருவதாக கூறியுள்ளார் மலேசிய முன்னாள் மன்னர்.

மலேசிய முன்னள் மன்னரும் Kelantan என்ற மாகாணத்தின் சுல்தானுமான ஐந்தாம் முகம்மது, தனது முன்னாள் மனைவியும் மொடலுமான ஒக்சானாவுக்கு சில சலுகைகள் அளிப்பதாகவும், ஆனால் தான் கூறும் சில நிபந்தனைகளுக்கு அவர் ஒத்துப்போக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

முதலாவது, ஒக்சானாவுக்கு பிறந்த மகன் லியோனை ஒரு சன்னி பிரிவு இஸ்லாமியராக வளர்க்க வேண்டும் என்றும், பிற்காலத்தில் ஒக்சானாவோ அவரது மகனோ தன்னை சந்திக்கக் கூடாது என்றும், தனது நிபந்தனைகளுக்கு சம்மதித்தால், ஒக்சானாவின் மகன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவங்கி 195,000 பவுண்டுகளை அவனுக்காக கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதாவது, ஒக்சானாவின் மகன் லியோன் பல்கலைக்கழக படிப்பு முடிக்கும் வரை இந்த தொகையிலிருந்து 1,160 பவுண்டுகள் கொடுக்கப்படும். அத்துடன், 77,600 பவுண்டுகளையும் ஒக்சானாவுக்கு கொடுக்க முன்வந்துள்ளார் முகம்மது.

அதாவது, இந்த நடவடிக்கைகள் எதற்காக என்றால், எப்படியும் முகம்மதுக்கு மீண்டும் மலேசிய மன்னராகும் திட்டம் இருப்பதால், அவர் லியோனை தனது மகன் என ஏற்கவோ மறுக்கவோ மாட்டார் என தெரிகிறது.

ஆனால் ஒக்சானா இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது, காரணம் ஒப்பந்தத்தின்படி, அவர் அரை மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட, தனது சமூக ஊடக கணக்குகளை அகற்றுவதோடு, மன்னருடன் அவர் இருக்கும் படங்களையும் அகற்றவேண்டும்.

திருமணமே முறிந்துபோகும் என்ற நிலை வந்த பிறகும் சமூக ஊடகங்களில் படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுவந்த ஒக்சானாவா, இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளப் போகிறார்?

ஆனால், அவர் ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காவிட்டால், அவருக்கு மன்னர் கொடுக்கும் பணம் முழுவதையும் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்து என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்