விமான நிலையத்தை அதிர வைத்த விமானி.. ஆயுதங்களுடன் திரண்டு சுற்றி வளைத்த பொலிசாரால் பரபரப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள விமான நிலையத்தில் விமான கடத்தல் அபாய ஒலி எழுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்டர்டாமின் Schiphol விமான நிலையத்தில் புதன்கிழமை இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் இருந்து மாட்ரிட் செல்லும் ஸ்பெயின் விமான நிறுவனமான ஏர் யூரோபா விமானத்திலே இந்த கடத்தல் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நெதர்லாந்து பொலிசார் விமானநிலையத்தின் ஒரு பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுத்தனர். அவசரகால வாகனங்கள் விமானத்தை சுற்றி திரண்டது.

பின்னர், நடந்த விசாரணையில் விமானி தவறுதலாக கடத்தல் அபாய ஒலியை எழுப்பியது தெரியவந்தது.

ஆம்ஸ்டர்டாம்-மாட்ரிட் விமானத்தில் இன்று பிற்பகல் தவறான அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனையடுத்து, விமான நிலையத்தில் கடத்தல்களின் போது முன்னெடுக்கப்டும் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது என்று விமான நிறுவனமான ஏர் யூரோபா ட்விட்டரில் தெரிவித்தது.

மேலும், எதுவும் நடக்கவில்லை, அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருக்கிறார்கள், விரைவில் விமானம் புறப்படும். நாங்கள் ஆழ்ந்த மன்னிப்பு கேட்கிறோம் என கோரியுள்ளது.

Schiphol, ஐரோப்பாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும், இது ஆண்டுக்கு 70 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை அளிக்கிறது.

அபாய ஒலியை அடுத்து விமான நிலையத்தின் சில பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டது, ​​விமானத்தை சுற்றி பொலிஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சூழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து புதன்கிழமை பிற்பகுதியில் Schiphol விமான நிலையத்தில் விமான அட்டவணை தடைபட்டது. விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளது.

நெதர்லாந்து அரச ராணுவ காவல்துறை முன்னர் ‘சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையை’ விசாரிப்பதாகக் கூறியது, ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் பாதுகாப்பாக இருப்பதாக அறிவித்தனர்.

விமானம் 27 பயணிகளை ஏற்றிச் சென்றதாக நெதர்லாந்து ஊடகங்கள் தெரிவித்தன.அலாரம் எவ்வாறு தற்செயலாக அடித்திருக்க முடியும் என்பதை அறிய விசாரணை நடந்து வருகிறது.

கடத்தல் அபாய ஒலியை ஒரு பொத்தானை அழுத்துவதின் மூலம் எழுப்ப முடியாது எனவும், நான்கு இலக்க குறியீட்டு எண்களை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினால் மட்டுமே அபாய ஒலியை எழுப்ப முடியும் என்று வானூர்தி பொறியியல் நிபுணர் Joris Melkert உள்ளுர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்