திருமணம் முடிந்த கையோடு கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த புதுமணத்தம்பதி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

திருமணம் முடிந்த கையோடு புதுமணத்தம்பதியினர் கிரிக்கெட் பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட ஹாசன் தஸ்லீ என்கிற இளைஞருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த கையோடு பாரம்பரிய முறைப்படி, அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் டெட்ராய்டில் அமைந்துள்ள மணமகளின் வீட்டில் விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது.

அந்த நேரத்தில் தான், பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டியும் நடைபெற்று கொண்டிருந்துள்ளது.

ஹாசன் தஸ்லீக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், முக்கியமான நேரத்தில் கூட பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்த்து ரசித்துள்ளார்.

இந்த நிலையில் தம்பதியினரிடன் புகைப்படத்தோடு, ஹாசன் தஸ்லீ கூறியிருக்கும் செய்தியினையும் ஐசிசி தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

முன்னதாக இரண்டாவது டி20 போட்டியியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்