அழுது அடம்பிடிக்கும் பிஞ்சு குழந்தை... இளம் தந்தையின் செயலுக்கு குவியும் பாராட்டு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் அழுது அடம்பிடிக்கும் தனது பிஞ்சு குழந்தையை சமாளிக்க இளம் தந்தை ஒருவர் தமது மனைவியின் உடைகளை உடுத்திக் கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது.

சீனாவில் முதன் முறையாக தந்தையான அந்த இளைஞர், தமது மனைவி குடியிருப்பில் இல்லாத வேளைகளில் தனது பிஞ்சு குழந்தையை சமாளிக்க போராடி வந்துள்ளார்.

அவரால் நிம்மதியாக தமது மொபைலில் விளையாட முடியாமல் போனது அவருக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதனால், திடீரென்று ஒருநாள் தமது மனைவியின் உடைகளை உடுத்திக் கொண்டு, அழும் குழந்தையை சமாளித்துள்ளார்.

குழந்தையும் தாயாரின் அருகே படுத்திருப்பதாக கருதி அழாமல் தூங்கியுள்ளது. இந்த இளம் தந்தையின் இச்செயல் பத்திரிகை ஒன்றில் வெளியாகி தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பலரும் அந்த தந்தையை பாராட்டியுள்ளதுடன், இதுபோல தாங்களும் முயற்சிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்