பூங்கொத்து கொடுப்பது போல தேர்தல் வேட்பாளரின் நெஞ்சில் கத்தியால் குத்திய இளைஞர்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பெய்ஜிங்கை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு ஹாங்காங் அரசியல்வாதி இன்று தேர்தல் பிரசாரத்தின் போது கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

57 வயதான ஜூனியஸ் ஹோ தனது தொகுதியில புதன்கிழமை காலை 8:45 மணியளவில் தாக்கப்பட்டார் என்று ஹாங்காங் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹாங்காங்கில் கடந்த 5 மாதத்திற்கும் மேலாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் பெய்ஜிங்கிற்கு ஆதரவாக பேசி வரும் ஜூனியஸ், அரசாங்கத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை இகழ்ந்து பேசி வருகிறார். இதனால் போராட்டக்காரர்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

வீடியோவை காண...

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜூனியஸ், பொதுமக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது ரசிகர் போல வந்த ஒரு இளைஞர் அவருக்கு பூங்கோத்து கொடுத்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவருடைய நெஞ்சு பகுதியில் பாய்ச்சியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜூனியஸின் தொண்டர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சைக்கு பின்னர் பேசிய ஜூனியஸ், தனது விலா எலும்புக் கூண்டால் கத்தி தடுக்கப்பட்டதாகவும், அவருக்கு இரண்டு சென்டிமீட்டர் ஆழத்தில் (0.79 அங்குல ஆழம்) காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தின் போது, மற்றொரு இளைஞர் உள்ளூர் அரசியல்வாதியின் காதை கடித்து துப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்