கழிவறைத்தொட்டியின் அமரும் பகுதியில் வைரக்கற்கள்.. முழுவதும் தங்கம்... எவ்வளவு மதிப்பு தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உலகிலேயே விலை உயர்ந்த கழிவறைத் தொட்டி சீனாவில் உள்ள கண்காட்சியில் வைக்கப்பட்ட நிலையில் அதன் மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.

இந்த கழிவறைத் தொட்டி முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.

மனிதர்கள் அமரும் பகுதியில் 335 கேரட் எடையிலான 40 ஆயிரத்துக்கும் அதிகமான வைரக்கற்கள் இதில் பதிக்கப்பட்டுள்ளன.

ஹாங்காங்கில் உருவாக்கப்பட்ட இந்த கழிவறைத்தொட்டியின் மதிப்பு $1,288,677 என தெரியவந்துள்ளது.

இந்த தங்கக் கழிவறை ஹாங்காங்கைச் சேர்ந்த ஆரோன் ஷம் என்ற நகைக்கடையில் தயாரிக்கப்பட்டு ஷாங்காய் நகரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகைக்கடை உரிமையாளர் கூறுகையில், வைரங்கள் பதியப்பட்டுள்ள உட்காரும் பகுதி புல்லட் புரூஃப் எனப்படும் துப்பாக்கித் தோட்டாவால் துளைக்கமுடியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை வாங்க யாராவது முன் வந்துள்ளார்களா என்பது குறித்து தற்போது கூற முடியாது, அதே சமயம் இதை விற்பனை செய்ய நான் விரும்பவில்லை.

இதை கண்காட்சியில் வைத்தால் தான் அனைவரும் பார்த்து மகிழ்ச்சியடைய முடியும் என கூறியுள்ளார்.

இந்தக் கழிவறை தான் உலகிலேயே விலை உயர்ந்தது என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்