ஒரு வாளி தண்ணீருடன் பாரிய தீ விபத்தை எதிர்த்து போராடிய வீரன்: வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மிகப்பெரிய தீ விபத்தின் நடுவே ஒரு வாளி தண்ணீரை மட்டுமே ஆயுதமாக கொண்டு போராடிய நைஜீரிய நபரின் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நைஜீரிய நாட்டின் மத்திய லாகோஸில் உள்ள போலோகன் சந்தையில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வண்ணமயமான நைஜீரிய துணிகள், ஆடை மற்றும் காலணிகளை வாங்க லாகோஸில் சிறந்த இடங்களில் ஒன்றாக இது அறியப்படுகிறது.

இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட 5 மாடி கட்டிடம் ஒன்றில், ட்ராக்சூட் கால்சட்டை மற்றும் ஒரு ஜோடி உயரமான பூட்ஸ் அணிந்திருந்த ஒரு மனிதன் மட்டும், தனி ஒரு ஆளாக நீண்ட நேரம் தீயை அணைக்க போராடியுள்ளார்.

அதனை பக்கத்து மாடியில் இருந்த நபர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நபரால் தீயை அணைக்க முடியவில்லை என்றாலும், எந்தவித பயமும் இன்றி முயற்சியை கைவிடாமல் தொடர்ந்துள்ளார்.

இதற்கிடையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

இதுகுறித்து லாகோஸில் உள்ள ஃபெடரல் தீயணைப்பு சேவையின் தலைவர் கானியு ஒலாய்வோலா கூறுகையில், தீயின் அளவு பெரிதாகி பல இடங்களுக்கும் பரவியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் இரண்டாக பிரிந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்