14 வயது சிறுமியை 5 பேர் துஷ்பிரயோகம் செய்த வழக்கு.. நாட்டையே உலுக்கிய நீதிமன்ற தீர்ப்பு: போராடும் பெண்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் பாலியல் துஷ்பிரயோக சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பெண்ணிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

14 வயது சிறுமியை 5 நபர்கள் கூட்டாக துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கடந்த வியாழக்கிழமை பார்சிலோனா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பவத்தின் போது சிறுமி மதுபோதையில் இருந்ததாகவும் மற்றும் அவர் ஒப்புக்கொள்ளவோ எதிர்க்கவோ இல்லை என குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக ஐந்து பேரும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபணமான நிலையிலும், அவர்களுககு குறைந்த பட்சமாக 10 முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஸ்பெயின் நாட்டின் சட்டத்தின் கீழ், வலுகட்டாயமாக அல்லது மிரட்டி துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் மட்டுமே கற்பழிப்பு நிகழ்ந்ததாக எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில், சிறுமி மதுபோதையில் இருந்ததாகவும், அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவோ எதிர்க்கவோ இல்லை. அதனால், வலுகட்டயாமாக அவர் உட்படுத்தப்படவில்லை என நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு அந்நாட்டு பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் துஷ்பிரயோக சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பெண்ணிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

பெண்ணின் அனுமதியின்றி நடந்தாலே அது கற்பழிப்பு என தண்டனைச் சட்டத்தை மாற்றக் கோரி நீதி அமைச்சகம், உச்ச நீதிமன்றம் மற்றும செனட் ஆகியவற்றுக்கு A Change.org என்ற அமைப்பு மனு அனுப்பியுள்ளது.

இந்த மாற்றத்தை கோரி குறித்த மனுவில் 3 நாட்களில் 300,000 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். பொதுமக்களிள் கோரிக்கை சோசலிச அரசாங்கத்தை தண்டனைச் சட்டத்தை மறுஆய்வு செய்ய வழிவகுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்