மனிதகுலம் எதிர்கொள்ள உள்ள பேரழிவு... உலகெங்கிலும் உள்ள 11,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சேர்ந்து விடுத்த எச்சரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்

உலகளாவிய விஞ்ஞானிகள் கூட்டணி காலநிலை அவசரநிலையை அறிவித்துள்ளது, மனிதகுலம் எதிர்கொள்ளும் பேரழிவு விளைவுகளைத் தவிர்க்க அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை வகுத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞான சமூகத்தைச் சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட ஒரு ஆய்வறிக்கையில், மோசமான துன்பத்தை தவிர்ப்பதற்குத் தேவையான முயற்சிகளின் அளவை அரசாங்கங்கள் அதிகரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளாக அறிவியல் ஆதாரத்தை கொண்டு விஞ்ஞான சமூகம் தொடர்ந்து எச்சரித்து வந்தாலும், வாயு மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்காணித்து வரும் அரசாங்கங்களால் போதிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு பெரிய அச்சுறுத்தல் குறித்து மனிதகுலத்தை எச்சரிக்கும் மற்றும் உள்ளதை உள்ளபடி கூற வேண்டிய தார் மீக கடமை விஞ்ஞானிகளுக்கு உள்ளது.

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், உலகெங்கிலும் இருந்து 11,000 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கையொப்பமிட்டவர்களுடன், பூமி காலநிலை அவசரநிலையை எதிர்கொள்கிறது என்பதை தெளிவாகவும் ஐயப்பாடுக்கிடமின்றி அறிவிக்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி பயன்பாடு, மேற்பரப்பு வெப்பநிலை, மக்கள்தொகை வளர்ச்சி, நிலம் அழித்தல், காடழிப்பு, துருவ பனி அதிகரிப்பு, கருவுறுதல் விகிதங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கார்பன் மாசு போன்ற 40 ஆண்டுகளுக்கும் மேலாக கிடைக்கக்கூடிய தரவுகளின் அறிவியல் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்