ஆப்கானிஸ்தான் வெடிகுண்டு தாக்குதல் - 9 பள்ளி குழந்தைகள் பலி

Report Print Abisha in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் இன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலால் 9 பள்ளி குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் பெருமளவில் இருந்துவருகின்றது. அங்கு அடிக்கடி வெடிகுண்டு தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.

தீவிரவாதிகளுக்கு இராணுவம் பதிலடி கொடுத்தாலும் தீவிரவாதிகள் மக்களை குறிவைத்தே தாக்குதலை முன்னெடுக்கின்றனர்.

இந்நிலையில், தகார் மாகாணத்தில் உள்ள தர்காட் மாவட்டத்தில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பள்ளிக்குழந்தைகள் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் தொடர்பாக மேலாதிக தகவல்கள் எதும் தற்போதுவரை வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்