7 பேருடன் மாயமான ஹெலிகோப்டர்.. கடலில் ஆங்காங்கே கிடந்த உடல்கள்: வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்படரிலிருந்து காணாமல் போன ஏழு பேரில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தென் கொரிய மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

தீவுக்கு 600 மீட்டர் தெற்கே 72 மீட்டர் (240 அடி) ஆழத்தில் இருந்த ஹெலிகாப்டருக்குள் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது, மற்ற இரண்டு உடல்கள் அருகிலுள்ள நீரில் காணப்பட்டதாக கடலோர காவல்படை பிரதிநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வியாழக்கிழமை இரவு ஜப்பானில் தாகேஷிமா என்று அழைக்கப்படும் டோக்டோவிலிருந்து காயமடைந்த மீனவர் ஒருவர் அழைத்துச் சென்ற போது ஹொலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான EC225 ஹெலிகாப்டர் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் 5 மீட்புக்குழுவினர், மீனவர் ஒருவர் உட்பட 7 பயணித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை வெள்ளியன்று மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் வால் பகுதி உடைந்து 110 மீட்டர் தொலைவில் காணப்பட்டதாக மீட்பு கடலோர காவல்படை பிரதிநிதி கூறினார்.

மீட்கப்பட்ட மூன்று சடலங்களை அடையாளம் காண இன்னும் முடியவில்லை என்றும், இன்னும் காணாமல் போன நான்கு பேரை கண்டுபிடிப்பதற்கும் தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாக கூறினார்.

உடல்கள் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலால் கண்டுபிடிக்கப்பட்டன, இருப்பினும் நீர்மூழ்கிக் கப்பலின் ‘ரோபோ-கை’ பயன்படுத்தி உடல்களை எடுத்தால் பாதிப்பு ஏற்படும் என அஞ்சியதால், டைவர்ஸ் கடலுக்குள் சென்று உடல்களை மீட்டெடுத்தனர்.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சின் கப்பல்கள் மற்றும் டைவர்ஸ் மற்றும் தேசிய தீயணைப்பு அமைப்பின் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னார்வலர்கள் தேடுதல் நடவடிக்கைக்காக அணிதிரட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்