வியட்நாமை நோக்கி திரும்பும் குளிர்பதன லொறிக்குள் சிக்கி 39 பேர் பலியான வழக்கு: மூவர் கைது!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரித்தானியாவின் எசெக்சில் பிடிபட்ட லொறிக்குள் சடலமாக 39 புலம்பெயர்வோர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில், வழக்கு வியட்நாமை நோக்கி திரும்பியுள்ளது.

எசெக்சில் லொறி ஒன்றின் பின் இணைக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட கண்டெய்னருக்குள் 39 புலம்பெயர்வோர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், முதலில் உயிரிழந்தவர்கள் சீனர்கள் என்று பிரித்தானிய பொலிசார் எண்ணினர்.

பின்னர், Pham Thi Tra My (26) என்ற வியட்நாமிய பெண், மூச்சு விடமுடியாததால் சாகப்போகிறேன் அம்மா, உங்களை நேசிக்கிறேன், என அவரது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்ப, அவர் பதறிப்போய், பிரித்தானிய பொலிசாரை தொடர்பு கொள்ள, அதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

தற்போது, வழக்கில் அடுத்த முன்னேற்றமாக, வியட்நாமைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Hannah McKay/Reuters

உயிரிழந்தவர்களில் பத்து பேரின் குடும்பத்தினர் கொடுத்த தகவல்களின்பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக வியட்நாமில் மக்களைக் கடத்தும் கும்பல் ஒன்றை நடத்திவருவதாக சந்தேகிக்கப்படும் அந்த இருவரும் Ha Tinh மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள், பிரித்தானியாவில் 39 பேர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக கர்னல் Nguyen Tien Nam என்னும் வியட்நாம் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அயர்லாந்தில் Eamon Harrison (23) என்னும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை பிரித்தானியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் பொலிசார் இறங்கியுள்ளனர். அவர் நேற்று Dublin நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நவம்பர் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்வரை அவரை சிறையில் அடைக்கப்படும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்