பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த பாடகியின் ஆபாச படங்கள் கசிவு..! நெட்டிசன்கள் ஆதரவு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுதத்தன் மூலம் தேசிய அளவில் பிரபலமான பாக்கிஸ்தான் பாடகியின் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாக்கிஸ்தானிய பாப் பாடகி ரபி பிர்சாடா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக முதலில் மலைப்பாம்புகளுடனும், அதன்பிறகு வெடிகுண்டுகளுடனும் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார்.

இதன்மூலம் இந்தியாவிலும் பிரபலமடைந்த ரபி பிர்சாடாவின் ஆபாச படங்கள் வியாழக்கிழமையன்று இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக இணையதளவாசிகள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், பாடகியின் வீடியோ மற்றும் படங்களை பகிர வேண்டாம் என மற்றவர்களுக்கு கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

அதேசமயம் இணையத்தில் வீடியோ வெளியிட்ட அந்த தனி நபரை கடுமையாக சாடி வருகின்றனர். இதற்கிடையில், FIA சைபர் கிரைம் பிரிவை அணுகிய ரபி பிர்சாடா, தனது அந்தரங்க படங்களை வெளியிட்டவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

அவர் தனது தொலைபேசியை ஒரு கடையில் விற்றதாகவும், அந்த தொலைபேசியிலிருந்து திருடப்பட்ட தரவு என்றும் விளக்கியுள்ளார். மேலும், அந்த கடைக்கு எதிராகவும் புகார் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்