கார் விபத்து பரிசோதனைகளுக்காக உயிருள்ள பன்றிகளை சித்திரவதை செய்யும் நாடு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கார்கள் விபத்துக்குள்ளானால் எவ்வித சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அறியும் சோதனைகளுக்காக உயிருள்ள பன்றிகளை சீனா பயன்படுத்திவரும் விடயம் விலங்குகள் நல ஆர்வலர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தியின்படி, ஒரு குறிப்பிட்ட சோதனையில் 15 இளம்பன்றிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

24 மணி நேரம் பட்டினி போடப்பட்டு, ஆறு மணி நேரம் தண்ணீர் கொடுக்கப்படாமல் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட, பிறந்து 70 நாட்கள் முதல் 80 நாட்கள் வரையே ஆன அந்த பன்றிகள், கார் இருக்கைகளில் கட்டி வைக்கப்படுகின்றன்.

பின்னர், மணிக்கு 30 மைல் வேகத்தில் அவை மோதச் செய்யப்படுகின்றன. இந்த குறிப்பிட்ட சோதனையின்போது, ஏழு பன்றிகள் உடனடியாக உயிரிழந்தன, ஆறு பன்றிகள் ஆறு மணி நேரத்திற்குப்பின் உயிரிழந்தன.

இந்த சோதனைக்கு, விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொம்மைகளைப் பயன்படுத்தி இத்தகைய சோதனைகளை செய்யும் முறை நடைமுறைக்கு வந்த பின்னரும், இப்படி உயிருள்ள பன்றிகளை சித்திரவதை செய்வதை, அவர்கள் கண்டித்துள்ளனர்.

அத்துடன், பன்றிகள் காரில் அமர்வதில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள், இப்படி பன்றிகளை பயன்படுத்தி சோதனை செய்வதில் எந்த பயனும் இல்லை, காரணம், அவற்றின் உடல் அமைப்பு மனித உடல் அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

அதனால் பன்றிகளை பயன்படுத்தி செய்யும் சோதனைகளிலிருந்து கிடைக்கும் முடிவுகள், மனிதர்கள் விபத்தில் சிக்கும்போது ஏற்படுத்தும் விளைவுகளுடன் ஒப்பிடத்தக்கவை அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்