ஐ.எஸ் தலைவரை வேட்டையாடியது எப்படி? வெளியானது அந்த கடைசி வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐ.எஸ் தலைவர் அல் பாக்தாதியின் மறைவிடத்தை அமெரிக்க சிறப்புப்படை வேட்டையாடிய அந்த கடைசி தருண வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சிரியாவில் பதுங்கியிருந்த ஐ.எஸ் தலைவர் அல் பாக்தாதி, அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் பிரித்தானிய சிறப்புப்படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.

பாக்தாதி இருக்கும் இடம் மற்றும் அவரது நகர்வுகளை துல்லியமாக அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகளுக்கு ரகசியமாக தெரியப்படுத்திய குர்து உளவாளி ஒருவருக்கு 25 மில்லியன் டொலர் வெகுமதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாக்தாதியின் உடலை ஆழ்கடலில் கொண்டு சென்று வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சிறப்பு ராணுவத்தினர் அல் பாக்தாதியை வேட்டையாடிய அந்த கடைசி நேர வீடியோ பதிவானது அமெரிக்க ராணுவத்தினரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் பத்தாண்டு காலம் அமெரிக்க படைகளின் கண்ணில் இருந்து தப்பி வந்த அல் பாக்தாதி, இறுதியில் உளவாளி ஒருவரின் ரகசிய தகவல்களின் அடிப்படையில் வேட்டையாடப்பட்டார்.

இந்த தாக்குதல் நடவடிக்கையை மிக ரகசியமாக சிறப்பு நிபுணர்கள் குழு திட்டமிட்டதாகவும்,

அங்கீகாரத்திற்காகவோ புகழுக்காகவோ இதை எவரும் முன்னெடுக்கவில்லை எனவும் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்