டிக்கெட் இல்லாமல் பிடிபட்ட இளைஞர்கள், ஓடும் ரயிலிலிருந்து குதிக்கச் சொன்ன பரிசோதகர்: ஒரு திகில் சம்பவம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

எகிப்தில் பயணச்சீட்டு பரிசோதகரிடம் பயணச்சீட்டு இல்லாமல் பிடிபட்ட இளைஞர்கள் இருவரை, ஓடும் ரயிலிருந்து குதிக்கும்படி அவர் கூறியதையடுத்து, அவர்கள் இருவரும் குதித்துள்ள சம்பவம் ஒன்று கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Mohamed Eid மற்றும் Ahmed Mohamed என்னும் இரு இளைஞர்களும் எகிப்திலுள்ள Alexandriaவிலிருந்து Luxor என்ற நகருக்கு பயணச்சீட்டு இல்லாமல் பயணித்துள்ளார்கள்.

அவர்களை பிடித்த பயணச்சீட்டு பரிசோதகர் 3 பவுண்டுகள் அபராதம் செலுத்தும்படி கோரியுள்ளார்.

அவர்களால் அபராதம் செலுத்த முடியாமல் போகவே, ஆத்திரமடைந்த அந்த பயணச்சீட்டு பரிசோதகர், ஓடும் ரயிலின் கதவைத் திறந்து, அந்த இளைஞர்களிடம், அபராதம் கட்ட முடியாவிட்டால் வெளியேறுங்கள் என்று கத்தியுள்ளார்.

என்ன மன நிலையில் இருந்தார்களோ தெரியாது, அந்த இளைஞர்கள் இருவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயிலிலிருந்து குதித்துவிட்டார்கள்.

குதித்ததில், Eid உடனடியாக உயிரிழக்க, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Ahmed தனது காலை இழக்க நேரிட்டது.

இத்தனைக்கும் பிறகு அந்த பயணச்சீட்டு பரிசோதகர், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அவர்கள்தான் குதித்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் எகிப்தின் போக்குவரத்துத்துறை அமைச்சரான Kamel Al Wazir அந்த இளைஞர்கள் ஒன்றும் குழந்தைகளல்ல, பயணச்சீட்டு வாங்காவிட்டால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதையடுத்து, Wazir ராஜினாமா செய்யவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

இதற்கிடையில் அந்த பயணச்சீட்டு பரிசோதகரும், ரயிலின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அரசின் ரயில்வே துறை, Eid குடும்பத்திற்கு 4,817 பவுண்டுகளும் Ahmed குடும்பத்திற்கு 963 பவுண்டுகளும் இழப்பீடு வழங்க உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்