இந்து மாணவியின் உடலில் ஆண் டி.என்.ஏ: தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் மர்மமாக இறந்துகிடந்த இந்து மாணவியின் வழக்கில் புதிய திருப்பமாக அவருடைய உடலில் இருந்து ஆண் டி.என்.ஏ கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் லார்கானா நகரில் உள்ள மருத்துவ கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவரும், சமூக ஆர்வலருமான நிம்ரிதா சாந்தினி, செப்டம்பர் 16 ஆம் திகதி அன்று அவரது அறையில் மர்மமாக இறந்து கிடந்தார்.

கழுத்தில் கயிறு இறக்கப்பட்ட நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, நிம்ரிதா தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியது.

ஆனால் கராச்சியில் உள்ள டவ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ ஆலோசகரான நிம்ரிதாவின் சகோதரர் விஷால், அவரது கழுத்து பகுதியில் இருந்த காயங்கள் அவர் தற்கொலை செய்யவில்லை என்பதை காட்டுவதாகவும், கால் பகுதியில் இருந்த காயம் யாரோ கையை அழுத்தி பிடித்திருப்பதாகவும் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிபதி, நேரடியாக சென்றும் இடங்களை பார்வையிட்டார்.

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று பேசிய லர்கானா மாவட்டத்தின் மூத்த பொலிஸ் அதிகாரி மசூத் பங்காஷ், நிம்ரிதா சந்தானியின் டி.என்.ஏ அறிக்கையில், அவரது உடல் மற்றும் துணிகளில் இருந்து ஒரு ஆண் சந்தேக நபரின் டி.என்.ஏ மாதிரி கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் வழக்கு தற்போது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் பாதிக்கப்பட்டவரின் இரண்டு வகுப்பு தோழர்கள் - மெஹ்ரான் ஆப்ரோ மற்றும் அலி ஷான் மேமன் உட்பட 32 நபர்களை பொலிஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அவர்களுடைய செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை ஆய்வு செய்ததில் ஆப்ரோ, நிம்ரிதாவுடன் பரிமாறிக்கொண்ட 40 குறுஞ்செய்திகளை நீக்கியிருப்பது தெரியவந்தது.

மேலும் இருவருக்கும் இடையே காதல் சம்மந்தப்பட்ட ஒரு உறவு இருந்திருப்பதும், திருமணம் செய்யுமாறு கூறிய நிம்ரிதாவை, ஆப்ரோ நிராகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்