14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்.. பிரம்மாண்டமாக நடந்த திருமணம்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஸ்பெயினின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடாலின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

டென்னிஸ் விளையாட்டின் உச்ச நட்சத்திரமான ரபேல் நடால், ஸ்பெனியில் உள்ள தீவான மல்லோர்காவில் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொண்டார்.

அந்த தீவில் உள்ள பிரபல கோட்டையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், சுமார் 350 நபர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால், திருமணத்தில் புகைப்படம் எடுக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

உலக பிரபல சமையல் கலைஞரான Quique Dacosta, திருமண விழாவுக்கான உணவு வகைகளை தயாரித்துள்ளார். நடால் தனது காதல் மனைவியான ஸிஸ்கா பெரெல்லோவை, 2015ஆம் ஆண்டு தனது சகோதரி மூலம் சந்தித்தார்.

ஸிஸ்காவும், தனது சகோதரியும் குழந்தைப்பருவ நண்பர்கள் என்பதால், நடால்-ஸிஸ்கா 14 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். முதலில் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ஸிஸ்கா, ரபேலுடனான காதலுக்குப் பின்னர் ரபேல் நடால் ஃபவுண்டேஷனின் திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டார்.

திருமணம் நடைபெற்றாலும் அடுத்தடுத்த டென்னிஸ் தொடர்களால், நடாலுக்கு அதனை கொண்டாட நேரம் இல்லை. இதனால் தேனிலவு குறித்த திட்டம் எதையும் அவர் அறிவிக்கவில்லை.

டென்னிஸ் உலகில் இதுவரை 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை நடால் வென்றிருக்கிறார். அவரது நண்பரும், களத்தில் சக போட்டியாளராக கருதப்படும் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர், சுவிஸில் நடக்கும் உள்ளூர் தொடர் காரணமாக இந்த திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்