பத்திரிகையாளர் கஷோகி கொலை விவகாரம்.... திருப்பத்தை ஏற்படுத்தும் 45 நிமிட ரகசிய ஓடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

துருக்கியில் சவுதி பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்ட அன்றைய தினம் சவுதி தூதரகத்தில் கிடைத்த ரகசிய ஓடியோ தொடர்பில் பிரித்தானிய வழக்கறிஞர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி பத்திரிகையாளர் கஷோகியின் நினைவுநாளையொட்டி அவரது கொலை தொடர்பான விவகாரம் மீண்டும் பரப்பாகப் பேசப்படுகிறது.

கஷோகி மரணம் தொடர்பாக ஐ.நா விசாரணைக்கு உதவி செய்யும் பிரித்தானிய வழக்கறிஞர் ஹெலினா கென்னடி கஷோகி கொலை தொடர்பான சில தகவல்களை பிரபல ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கிடைத்த சில ரகசிய ஓடியோகளில் தான் கேட்ட விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார். ``கஷோகி இறந்த அன்றைய தினம் அவர் தூதரகத்துக்குள் நுழையும்போது, அங்கிருந்த சிலர் ‘பலிகொடுக்கும் விலங்கு வருகிறது’ எனக் கூறினர்.

பின்னர் கஷோகியைப் பார்த்து, கிண்டல் செய்து சிரிப்பதும் அந்த ஓடியோவில் பதிவாகியிருந்தது.

தொடர்ந்து, கஷோகி ’எனக்கு ஏதேனும் ஊசி போடப்போகிறீர்களா?’ எனக் கேட்கிறார். அதற்கு ’ஆம்’ எனப் பதில் வருகிறது.

அடுத்த சில நிமிடங்களில் ஒருவர் மூச்சு விட திணறும் சத்தம் கேட்கிறது. அது கஷோகியாக இருந்திருக்கலாம். அவரது முகத்தில் பிளாஸ்டிக் பைகளைக் கட்டி மூச்சு திணறச் செய்திருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மற்றொரு ஓடியோவில், `உடல் மற்றும் இடுப்புப் பகுதி இந்த பைக்குள் நுழையாது’ என்பதைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இதேபோன்று மொத்தம் 45 நிமிட ஓடியோ பதிவுகளை ஐ.நா விசாரணை ஆணையத்தில் துருக்கி சமர்ப்பித்துள்ளது என்று கென்னடி கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்