குவியல் குவியலாக தங்க கட்டிகள்: அதிரடி சோதனையில் வசமாக சிக்கிய நபர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் முன்னாள் மாகாண ஆளுநர் ஒருவரது குடியிருப்பின் ரகசிய அறையில் இருந்து டன் கணக்கில் தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சீனாவின் ஹைனான் மாகாணத்தின் Haikou நகரில் அமைந்துள்ள முன்னாள் மாகாண ஆளுநர் ஒருவரது குடியிருப்பிலேயே தங்க குவியலை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

Zhang Qi என்ற அந்த நபர் தற்போது விளக்கமறிதல் குழுவின் விசாரணையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அவரது விளக்கம் கேட்ட பின்னர், முழு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என கூறப்படுகிறது.

பொலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் Zhang Qi-ன் குடியிருப்பின் ரகசிய அறையில் இருந்து சுமார் 13.5 டன் எடை கொண்ட தங்க கட்டிகளும் பல மில்லியன் உள்ளூர் பணமும், விலை உயர்ந்த பொருட்கள் பலவும் மீட்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி அவரது குடும்பத்தாரின் பெயரில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பல ஆவணங்களும் சிக்கியுள்ளது.

முன்னெடுக்கப்படும் விசாரணையில் அவர் குற்றவாளி என நிரூபணமானால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உளவு அமைப்புகளின் அறிக்கையின்படி கடந்த செப்டம்பர் மாதம் அவர் மீது ரகசிய கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னரே அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்