அச்சுறுத்தும் கிம்... ஜப்பானின் பிரத்யேக பகுதியை தாக்கிய வட கொரியா ஏவுகணை: கிழக்கு ஆசியாவில் பதற்றம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிம் ஜாங்-உன் அருகில் உள்ள நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்கிறார்.

வட கொரியா ஏவிய ஏவுகணைகளில் ஒன்று ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தை தாக்கியதாக அந்நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் Yoshihide Suga கூறியுள்ளார்.

புதன்கிழமை வட கொரியா அதன் கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து ஏவுகணை சோதனை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

அதன் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதாக அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகள் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தென் கொரியா கூறியுள்ளது.

வட கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜப்பானிய பிரதமர் Shinzo Abe, இது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுவதாகக் கூறினார். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவியதாகவும், அதில் ஒன்று ஜப்பானின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்தில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்