பிளாஸ்டிக் பையில் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு கிடந்த 16 வயது மாணவியின் உடல்! அதிர்ச்சி சம்பவத்தால் பீதி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் 16 வயது பள்ளி மாணவி காணாமல் போன நிலையில் பிளாஸ்டிக் பையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அவர் சடலம் கண்டெண்டுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசாமர் மெண்டீஸ் (16) என்ற மாணவி Veracruz மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்பிய இசாமர் திடீரென காணாமல் போனார்.

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் அவரை தேடி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு சாலையில் இருந்த பெரிய பிளாஸ்டிக் பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சிலர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து பிளாஸ்டிக் பையில் இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து தடயவியல் பரிசோதனைக்கு உடல் அனுப்பட்ட நிலையில் அது மாயமான இசாமரின் உடல் என தெரியவந்தது.

இந்த கொடூர கொலை இசாமர் படித்த பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு மாணவி கூறுகையில், இசாமர் மகிழ்ச்சியாக இருந்தாள், அவருக்கு பள்ளியில் யாருடனும் எந்த பிரச்னையும் இல்லை என கூறினார்.

இன்னொரு மாணவி கூறுகையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது, எங்களுக்கு பயமாக உள்ளது, பள்ளிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலைக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்