தனது உயிரை இரையாக்கி.. 5 வயது தங்கையை காப்பாற்றி ஹீரோ சிறுவன்: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற நபரிடம் போராடிய சிறுவன், தனது உயிரை கொடுத்த 5 வயது தங்கையை காப்பாற்றியுள்ளான்.

15 வயது Khyler Edman என்ற சிறுவனே தங்கைக்காக இவ்வாறு உயிர் தியாகம் செய்துள்ளார். சம்பவத்தன்று Florida, Port Charlotte பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வரும் Khyler Edman, தனது தங்கையை கவனித்து வந்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் கொள்ளையன் ஒருவன் நுழைந்துள்ளான். தனது தங்கையையும், வீட்டையும் பாதுகாக்க Khyler, கொள்ளையனிடம் போராடியுள்ளான்.

சாலையில் ரத்த காயங்களுடன் சந்தேகத்திற்குரிய வகையில் நபர் ஒருவன் செல்வதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர், பொலிஸிக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், வீட்டிற்கு அருகே கத்தி குத்து காயங்களுடன் இருந்து 27 வயதான Ryan Cole-ஐ கைது செய்துள்ளனர். பின்னர், வீட்டிற்குள் இறந்து கிடந்த Khyler Edman-ன் உடலை மீட்டுள்ளனர்.

Charlotte County Sheriff's Office

இதில், Edman-ன் தங்கைக்கு சிறிய காயங்கள் கூட ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனது மகனுக்கு நீண்ட ஆயுள் இருந்தது, ஆனால், அது பாதியிலேயே பறிக்கப்பட்டுவிட்டது என Khyler Edman-ன் தாய் துயரத்தை வெளிபடுத்தியுள்ளார். கொல்லப்பட்ட Khyler-க்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளளனர்

உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தங்கை இத்துயர நினைவில் இருந்து வெளிவர, அவர்கள் வேறு வீட்டிற்கு மாற்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட Ryan Cole மீது சிறுவன் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவர் மீது கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்