சவுதி அரேபியா மன்னரின் மெய்க்காப்பாளர் சுட்டுக் கொலை... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
568Shares

சவுதி அரேபியா மன்னரின் நம்பிக்கைகுரிய மெய்க்காப்பாளர் அவரது நண்பரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியா நாட்டு முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் அப்துல் அஜிஸ் அல்-பக்ம்.

அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் இறந்த பின்னர் அவரது மகனும் தற்போதைய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஜிஸ் சவுத்-தின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராக அப்துல் அஜிஸ் அல்-பக்ம் இருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை ஜெத்தா நகரில் வசிக்கும் நண்பர் ஒருவரை சந்திக்க அப்துல் அஜிஸ் அல்-பக்ம் சென்றிருந்த போது, அங்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்துல் அஜிஸ் அல்-பக்ம்-ஐ நோக்கி அவரது நண்பர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

இதனால் அப்துல் அஜிஸ் அல்-பக்ம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் கொலையாளியை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். அங்கு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பொலிசார் காயமடைந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்