காதலியுடன் தனிமையில் இருந்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த காதலன்... அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
498Shares

அர்ஜெண்டினாவில் மனைவி தன்னுடன நெருக்கமாக இருந்த வீடியோவை நண்பர்களிடம் காண்பித்ததால், கோபத்தின் உச்சிக்கு சென்ற அப்பெண் அவரின் மர்ம உறுப்பை வெட்டி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினா நாட்டின் கார்டபா நகரத்தை சேர்ந்தவர் பிரெண்டா பரட்டிபி 28 வயதான பெண் இவரும், 42 வயதான இசைக்கலைஞர் செர்ஜியோ ஃபெர்னாண்டெசும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் உடலுறவு கொண்ட நிகழ்வை படம்பிடித்து வைத்திருந்த ஃபெர்னாண்டெஸ், அதனை தனது நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்.

காதலனின் இந்த செயல் குறித்து தெரியவந்த காதலி பிரெண்டா, அவருக்கு தக்க தண்டனை அளிக்க விரும்பி சரியான நேரம் எதிர்நோக்கி காத்திருந்துள்ளார்.

அதன் படி, காதலன் ஃபெர்னாண்டெஸை மீண்டும் உடலுறவுக்கு அழைத்த அவர், Bondage எனப்படும் விநோத முறையில் உடலுறவு மேற்கொள்வதற்காக காதலனின் கண்களை மூடியுள்ளார். காதலியின் செயலில் சந்தேகமடைந்த ஃபெர்னாண்டெஸ் தனது கை கால்களையும் கட்ட முயன்ற காதலியை தடுத்துள்ளார்.

அதன் பின் காதலனை ஆசை வார்த்தை கூறி மயக்கிய காதலி பிரெண்டா, அவர் அசந்த நேரம் பார்த்து காதலன் ஃபெர்னாண்டெசின் பிறப்புறுப்பை வெட்டி எரிந்து, நீண்ட நாட்களாக தன்னுள் வைத்திருந்த ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை தெரிவித்த காதலி பிரெண்டா ஃபெர்னாண்டெஸ் தன்னை ஒரு உடலுறவு பொருள் போல் எண்ணி நடந்து கொண்டதாகவும் அந்த ஆத்திரத்தில்தான் அவருக்கு தக்க தண்டனை வழங்க இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக பிரெண்டா மீது வழக்கு பதியப்பட்டு அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்